தாமதம் தவிர்த்த தற்கொலை - தேன்மொழியன்
தாமதம் தவிர்த்த தற்கொலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவின் இமையைக் கீறி
விரலொடிந்த கைகளின் நகத்தில்
உயிர் வாழும் உழைப்பை உரித்து
உலகமயத்தை உளரும் உன்னதம் ...
கனவின் காலடியில் ஊறி
உச்சத்தில் உலவிய சிறகில்
எல்லை எட்டிய யாவும் எரித்து
சரித்திரம் பறிக்கும் மோதல்கள் ...
இளமை முதுகில் ஏறி
வளமை தூவிய வானத்தை
அடிமை போர்வைக்குள் ஒளித்து
திறமையை துரத்தும் வாய்ப்புகள் ..
மானுட மகத்துவம் மீறி
பல்லுயிர் சிதைத்த வேகத்தில்
முரண்பாடாய் முளைத்த யாவிலும்
மரணம் விதைக்கும் உணவுகள் .
- தேன்மொழியன்