மா மனிதன்

உலகை திரும்பி பார்க்க வைத்த
மா மனிதரே!!!!!
ராமேஸ்வரம் பாவம் போக்கும்
பூமியாம்!!!!!
உன் திரு உருவம்
மண்ணில் விதைத்ததும்
அந்த பூமியும்
புண்ணியம் படைத்துவிட்டனவே!!!!!

ஐயா!!!
என் உயிர் போகும்
சூழல் வருமாயின்
உன் திரு உயிர் போன
இந்நன்னாளில் போகி விடாத
ஏங்கும் மனம்........
என் போன்று இளைஞர்க்கு.....

உம் கனவு
எங்கள் கனவாய்!!!!!
உம் பொன் மொழிகள்
எம் வாழ்வில்
துன்பங்களின் போது
உடன் வரும்........

இனி வரும்
எம் கனவுகள்
எம் உறக்கத்தில் வரும் கனவாய்
இருப்பதும் இல்லை.....
எங்களை உறங்க விடாமல்
வைப்பதுதான் ஐயா!!!!!.......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (30-Jul-15, 7:45 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : maa manithan
பார்வை : 178

மேலே