உண்மையில் பெண்

நாட்கள் வளர
உருவம் குறைந்து
தேய்பிறை இடைபோல்
இளமை ஊஞ்சலாடினாலும்
முயற்சிக்க மறவா சில பெண்கள்...

இலைமூடி
இருள்சூழ்ந்த காட்டில்
நுழைந்த ஒளிபோல்
அவள் முடி நரைத்தாலும்
சிறகடிக்கும் சில பெண்கள்...


சிசுவின் துடிப்பை கேட்டு
சாதனையின் கைதட்டலாக்கி
சுட்டுவிரலால்
வானின் உச்சிதொட்ட சில பெண்கள்...


உடலுக்குள்ளே வீடு கட்டி
உதிரத்தை உணவை ஊட்டி
கைகாலை தொட்டிலாக்கி
நடமாடும் சொர்க்கமாய் சில பெண்...


புத்தகத்தின் பக்கமென
திருப்பும் பல கண்ணை
கடல்படு நீராய் காணமலாக்கி
வீர நடைபோட்ட சிலபெண்கள்...

அடிமை வாசகத்தை
மொழியற்ற ஒலியாக்கி
உலகத்தை உருவாகின சில பெண்கள்...


உலகத்தின் அதிசயமாய்
உருவாகினாள் சில பெண்...

கவிஞனுக்கு கவிதையுமாய்
சில பெண்...

உயிருக்கு அதியாந்தமுமாய்
சில பெண்...

பலர் சாதனையில்
பெண்...

உண்மை சாதனையே
பெண்...

எழுதியவர் : ஏஞ்சல் (30-Jul-15, 6:14 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : unmaiyil pen
பார்வை : 370

புதிய படைப்புகள்

மேலே