இரவில் ஓர் பயங்கரம்

விர்ர்ர்ர்ர்ர்......

80 கிலோ மீட்டர் வேகத்தில்
விரைந்து கொண்டிருந்தது
அந்த கார்..
காரின் உள்ளே டிரைவர்
சீட்டை ஆக்கிரமித்து
ஓட்டிக் கொண்டிருந்தான்
ராஜ்...

ராஜ் 28 வயது
திருமணமாகி ஒரு வருடம்
ஆகியுருந்தது,,
மனைவி மாலா
தலை பிரவசத்திற்க்காய்
பிறந்த வீடு சென்றிருந்தாள்
பிரசவத்தில் சிக்கல்
என்று டாக்டர் சொன்னதால்
ஒரு வித பதட்டத்துடனே
காரை ஓட்டிக் கொண்டிருந்தான்
மாலாவின் தாய் வீடு
அவன் ஊரில் இருந்து
105 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தது...
தீடீரென்று தொலைபேசி
வரவே என்ன
ஏதென்று பதட்டத்த்தில்
கவனியாமல் உடுத்திய உடையுடன்
கிளம்பி விட்டான்...
இதற்க்கு முன் இரவில்
பயணம் செய்திருந்தாலும்
தனியாக பயணம் செய்வது
இதுவே முதல் தடவை,,,



தடக்,,, தடக்,,, கிக்

பள்ளத்தில் ஏறி இறங்கிய
கார் இருட்டைக் கிழித்துக்
கொண்டு அவசர கதியில்
விரைந்து கொண்டிருந்தது...


ராஜ் சாலையில் இருந்து
கண்ணெடுக்காமல் ஓட்டிக்
கொண்டு வந்தான்...
காரின் முகப்பு வெளிச்சத்தின்
முன் இருள் விலகி
வழி விட்டுக் கொண்டிருந்தது...

சுற்றிலும் வீடுகள்
ஒன்று கூட இல்லை...
மருந்துக் கூட எங்கையும்
வெளிச்சத்தைக் காணம்...

சாலையை பார்த்துக்
கொண்டிருந்த ராஜ்க்கு
சற்று தூரத்தில் ஒரு
பெண் கை காட்டி
மறிப்பது புரிந்தது...
திருடர்களை பற்றி
கேள்விபட்டிருந்ததால் காரை
நிறுத்தாமல் சென்று விடலாம்
என்று நினைத்தான்...
ஏனினும் கார் அவளுக்கு
சமீபத்தில் சென்று விட்டதால்
வாகனத்தை அவள்
அருகே நிறுத்தினான்...

சர்ர்ர்க்....

என்னம்மா...?

ஐயா பக்கத்துல தாங்க
என் வீடு என்
கொழந்தைக்கு ரெண்டு
நாளா காய்ச்சல் அடிக்குதைய்யா
ஊர்ல ஆஸ்பத்திரி எதும்
இல்லைங்கைய்யா..
இருந்த ஒரே ஓரு
ஆஸ்பத்திரியும் பூட்டிருக்கு யா..
பக்கத்து டவுன் - ல
மட்டும் என்ன இறக்கி
விட்டுடுங்கையா உங்களுக்கு
புண்ணியமா போகும்யா..
என்றாள் அவள்
அழுது கொண்டே,,,,

ராஜ் அப்பொழுது தான்
அந்த குழந்தையை பார்த்தான்..

கந்தல் துணிக்குள் சுருட்டி
வைக்கப்பட்டிருந்தது...

பார்க்க பரிதாபமாக
இருந்தது.

சரி ஏறிக்க....

ரொம்ப நன்றிங்கைய்யா...
என்று சொல்லியபடி
பின்புறமாக ஏறி
உட்கார்ந்து கொண்டாள்...

டர்ட் ட்....

வண்டி கிளம்பியது....

அவளிடம் ரெண்டொரு
வார்த்தை பேசினான்
அவள் எதுவும் பேசாமல்
அமுது கொண்டே
இருந்தாள்...


அரைமணி நேரம் சென்றது...


சதக்.. சதக்... கட்...
சப்.. சப்... சதக்...

பின்னால் எதோ ஒரு
சத்தம்,,
எதையோ கடித்து தின்பது
போல,,,,

அந்த பெண் எறும்
பொழுது குழந்தையை மட்டும்
தானே வைத்துக் கொண்டு
ஏறினாள்...
இதென்ன சத்தம்...?

என்று காரில் உள்ள
பின்புறமாக பார்க்கும்
கண்ணாடியில் அந்த
பெண்ணைப் பார்த்தான்...


அங்கே.....


அந்த பெண் குழந்தையை
கடித்துத் தின்று கொண்டிருந்தாள்...
வெறித்தனமாக...

ஆக்.. கசக்.. கடக்... கடக்...
சப்....சப்..சப்....


பார்த்த அவனுக்கு மயிர்க்கால்கள்
குத்திட்டு நின்றன...

இதயம் தறுமாறாய்
துடிக்க ஆரம்பித்தன....


மறுபடியும் கண்ணாடியைப்
பார்த்தான்....

அந்த பெண் வெறி
கொண்டு குழந்தையை
தின்று கொண்டிருக்கையும்
வெடுக்கென நிமிர்ந்து
அந்த கண்ணாடியைப்
பார்த்தாள்....

அவள் கடைவாய்
பற்க்கள் எல்லாம் நீளமாய்
இருந்தன...
கண்ணில் கருவிழி
இருக்க வேண்டிய இடத்தில்
வெள்ளையாக....
வாயிலிருந்து இரத்தம்
வடிந்து கொண்டிருந்தது....

அவனைப் பார்த்து
சிரித்தாள்,,,
வெறித்தனமாக,,,,
பேய்த்தனமாக,,,,

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹி ஹி
ஹி ஹி....


வினாடிக்கு வினாடி
அவள் சிரிப்பு சத்தம்
அதிகரித்தது....

ஹி ஹி ஹி ஈஈஈ
ஹி ஹி ஹி ஈஈ ஹி...


ஈரக்குலையை
நடுங்க வைக்கும் சிரிப்பு...


ராஜ் வெலவெலத்துப்
போனான்..
சற்றும் யோசிக்காமல்
ஓடிக் கொண்டிருக்கும்
கார் கதவை
திறந்து கொண்டு கீழே
குதித்து ரோட்டில்
உருண்டான்...


கார் எங்கோ
மரத்தில் டமால் என்று
மோதிய சத்தம் கேட்டது
மயக்கமடைந்தான்....


மறுநாள் மயக்கம்
தெளிந்து பார்க்கையில்
காரில் சில எலும்பு
துண்டுகள் மட்டும்
கிடந்தன......


- முடிந்தது...



இது எனது முதல்
கதை...
உங்கள் விமர்சனத்தை
எதிர்பார்க்கிறேன்....

எழுதியவர் : கவிஞன் அருள் (31-Jul-15, 11:44 am)
பார்வை : 3421

மேலே