காதல் பெண்ணே நில்லடி

காதல் பெண்ணே நில்லடி- என்
கவிதை கொஞ்சம் கேளடி
கண்ணால் ஜாடை செய்யடி
காலில் தொழுவேன் பாரடி

பாக்தாத் திருடன் நானடி
பளிங்கு சிலைதான் நீயடி
கடத்தி காதல் செய்யவா-என்
கண்ணில் உன்னை பூட்டவா

சந்திர விரலால் தீண்டியே
உனை பனியாய் உறைய செய்யவா
சூரிய விரலால் தீண்டியே
உனை உருக்கியே நானும் குடிக்கவா

பூக்களின் மலையா நீ
பூமி வந்த சிலையா
புன்னகை வாள் வீசி
எனை கொல்லாதே கொலையா

உன் கன்னக் குழியில் எல்லாம்
என் முத்தப் பூக்கள் நிரப்பவா
மெத்தை வித்தை காட்டிதான்
உனை மீண்டும் மழலை செய்யவா

காதல் நூலகம் நீயடி
கவிதை வாசகன் நீயடி
எழுத்துக் கூட்டிப் படிக்கவா
எதுகை மோனை தேடவா

அந்த கடவுள் நீயென்றால்
ஆண்டாளின் ஆண்பால் நானடி
பாவை உனை பாசுரம் பாடியே
பாலையை பூக்க செய்யவா

நிலவின் மகள்தான் நீயடி
நீலம் ஆம்ஸ்ட்ராங் நானடி
உன்னில் என் தடம் பதிக்கவா
உலகை உனக்காய் வாங்கவா

காதலின் தீவா நீ- இல்லை
காட்டாறு பெண்ணா நீ
உன்னில் தொலைந்தே கிடக்கிறேன்
உன் அன்பில் மூழ்கிப் போகிறேன்

உன்னை நானும் பாடியே
இவ்வுலகை கவிதை ஆக்கவா
உன்னில் என்னை தேடவா- இல்லை
உன்னில் தொலைந்தே போகவா

உன்னில் என்னை தேடவா
பெண்ணே...
உன்னில் தொலைந்தே போகவா

எழுதியவர் : மணி அமரன் (31-Jul-15, 9:07 pm)
பார்வை : 203

மேலே