எங்கே போகிறோம் நாம்

நிலவொளியில்
தோய்தல்
வெறுத்து
நித்தமொரு
வண்ணவிளக்கில்
விருந்துண்டோம்!
அப்பன் ஆத்தாள்
பக்கமிருந்தால்
முத்தமிடலில்
மோட்சமில்லையென
தனிகுடியும்
புகுந்தோம்!
ஆடிக்காற்று
அலப்பறை
செய்தால்
சன்னல் எல்லாம்
சட்டென
சாற்றினோம்!!
ஐந்தோ ஆறோ
நாட்கள்
மேகம் வடிந்தால்
ஐயோ சனியனே
போய்த்தொலைய
மாட்டேங்கிதே
இந்த மழை...
பொரிந்து
தள்ளினோம்!!!
நீளக்கடல்
நீலம்பாரிக்க
நம்மூர் கழிவுகளை
தானம் செய்தோம்!!!
சுத்திகரிப்பாளனை
சந்திக்க நிகழ்ந்தால்
புன்னகைகளை
பொத்திக்கொண்டோம்!!
வீதியோர கடையில்
வாங்கிய பொருளுக்கு
விலை குறை
குறையென
குரலுயர்த்தி
அன்னியதேசத்து
அசுரசந்தையில்
அடிமைப்பட்டோம்!!
அடுத்தவன்
விழும்போதெல்லாம்
இளக்கணமாய்
சிரித்தோம்!
எம்முறை
வரும்போதெல்லாம்
தலைக்கணத்தோடு
இலக்கணமே
பிழையென்றோம்!!
பிச்சைகேட்ட
பெண்ணை!
மகிழூந்தின்
கண்ணாடி தாழ்த்தி
மனச்சாட்சி
ஒழித்து பேசிவிட்டு
பக்கத்து இருக்கையில்
படுத்திருந்த நாயை
தடவிக்கொடுத்தோம்!!
காடுகள் மறந்து!
கணனியில்
தேடினோம்..
புல்லாங்குழலின்
பூபாளம்!!
பூப்பெய்த
பெண்ணை
பொருட்காட்சி
ஆக்கி கெளரவத்தை
கட்டியெழுப்பினோம்!!
குழந்தையின்
அழுகை மறந்தோம்!
தொலைக்காட்சி
தொடரில்
குழந்தையழுகையில்
நம் குழந்தையையும்
எட்டிப்பார்த்தோம்!!
ஓ மானிடமே!!
மகிழ்வென்பது யாது!!
குழந்தையின்
உதட்டில்
வன்மம் அறியா
புன்னகை!!
காதலியின்
காதுமடலில்
காமம் பாதி
காதல் பாதி
கலந்த ஸ்பரிசம்!!
அப்பாவின் முறைப்பு!
அம்மாவின் அணைப்பு!!
நிலவொளியில்
நிறுத்தாத முத்தம்!!
மழைத்துளியை
மடியேந்தும் சுகம்!!
ஆடிக்காற்றை
அள்ளிக்கொள்ளும்
அவா!!
தூரத்து மேகத்தை
அள்ளிவரும் கடலில்
அஸ்தமிக்கும்
சூரியன்!!!
அடுத்தவனும்
நானெனும்
எண்ணம் தரித்து
அன்பெறியும்
புன்னகை!!
யாரோ விழுகையில்
விழுந்தோடி
உதவும் எண்ணம்!!
இல்லானுக்கு
இரந்து கொடுத்து
அவன் இன்பத்தில்
லயித்தல்!!
வாரமொரு
சுற்றுலா!
கானக குயில்களின்
கானங்கள்!
இதுவெல்லவோ!
மகிழ்சி...
இன்னும்
சற்றுத்தொலைவில்
இடுகாடோ
சுடுகாடோ
எம் வாழ்வில்!!
இதற்க்குள்
எங்கே போகிறோம்
நாம்!!!மகிழ்சி தொலைத்து