உன் வருகை
புரிந்துகொள்,
என் சுவற்றில் உன் விருப்பப்
பாடல்களுக்கு மட்டுமே இடம்.
என் விருப்பக் காற்றுக்குக் கூட
அங்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உன் சங்கீதமான எழுத்துக்களை
மறுத்து எதுவும் எழுத இயலாதவன்.
வந்து நின்று ஒரு வாய் சொற்களையாவது
பெற்றுச் சென்றிருக்கலாம்.