பிரார்த்தனை
மலர் காய்ந்தபின் அது மறு ஜென்மம்வரை
காத்திருக்கவேண்டியது அவசியம்.
இன்னொரு ஜென்மமாவது நம் கூடல்
கூடுமா, காத்திருப்போம்.
இந்த ஜென்மம் முடிவுற்றுவிட்டது,
அப்படித்தான் அதற்கு விதி.
காய்ந்த மல்லிகை மறுபடியும்
மல்லிகையாகவே மலர பிரார்த்தனை.