மனித மனங்கள்
புதைத்த விதைக்கு தண்ணீர் விடாமல்
விடை இல்லா எதையோ தேடி அலையும்
மனித மனமே..
காலத்தின் வரவேற்ப்பில்
உன் கனவுகளை தொலைத்தாய்..
இடர்ப்பட்ட தோல்விகளில்
உன் வெற்றியை தொலைத்தாய்..
அரைவனைப்பை மறந்து
உன் அன்பினை தொலைத்தாய்..
பணத்தினில் மூழ்கி
உன் எளிமையை தொலைத்தாய்..
நாகரிகம் என்று கூறி
நீ கடைசியில் உன்னையே தொலைத்தாய்..
இத்தனையும் தொலைத்த மனித மனமே
வெளிச்சமில்ல விளக்கை ஏந்திக்கொண்டு
எதை தேடுகிறாய்?

