உன் மறக்க முடியா நினைவுகள்

உன்
காதல் வேண்டாம் என்று சொல்லி
நீ வேறு ஒருவனோடு
வாழக் கற்றுகொண்டிருக்கிறாய் ....
நானோ
உன் மறக்க முடியா நினைவுகளுடனும்
நீர் வற்றிய கண்களுடனும்
துடிப்பற்ற இதயத்துடனும்
நடைப்பிணமாய்
மனிதம் இல்ல உலகில்
வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.....