தமிழ் பயிர் வளர்ப்போம்

தமிழரா...?
அல்லது தமிழ் மொழி பேசுபவரா...?
வாருங்கள் களை பிடுங்குவோம்!

தாய் மொழியெனும்
தமிழ் மீது
களைகளை நாமே
கட்டாய விதையாக்கி விட்டோம்...!

ஆங்கிலக் களை
நம் தமிழ் பயிரை
வளர விடாமல் தடுக்கிறது
வாருங்கள் களை பிடுங்குவோம்

தமிழை
எதிரிப்படைகள் தாக்க வில்லை
தமிழரே இன்று
எதிரியாக மாறி விட்டோம்!

ஒரு காலத்தில்
எதிரி படையெடுத்து வந்து
தமிழினம் அழிந்தான்
இன்று தமிழரே
ஆங்கிலத்தை தரையிறக்கி
தமிழ் மொழியையே அழித்து
தமிழ் இனத்தையே ஒழிக்கிறான்

மொழி ஒரு இனத்தின்
முதல் ஊடகம்
வாழும் வீடு
கலாச்சாரம் என்று
அத்தனை வாழ்க்கை விழும்பியங்களும்
மொழி எனும்
முத்துக்குள்தான் ஒளிந்திருக்கிறது...!
மொழி அழிந்து விட்டால்
பழி யார் மீது விழும்...?
யாருடைய இருப்பு
இறந்து போகப்போகிறது...?

தமிழ் பயிரைத்தாக்கும்
இந்த ஆங்கிலக்கிருமி ஆபத்தானது
அது இன்று நமக்குள்
தொற்று நோயாகி விட்டது

தமிழ் மொழி
உங்கள் தாய் மொழியா...?
வாருங்கள் களை பிடுங்குவோம்
தொற்றுக் கிருமியை துடைத்தெறியும்
கிருமி நாசினியை உடன் அடிப்போம்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (3-Aug-15, 7:36 am)
பார்வை : 233

மேலே