பிச்சி சூடிய பெருமாட்டி

பிச்சிப்பூ சூடியநல் பின்னல் கரும்சடையும்
உச்சி வகிட்டில் ஒளிர்ந்திடும் குங்குமமும்
மெச்சிப் புகழ்தரும் முத்துமாலை மார்பணியும்
நச்சினை யுண்டான்வாழ் வே !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தேவி தன மார்பில் அணியும் முத்துமாலை புகழைத் தரும் என்பது
ஆதி சங்கரர் அழகின் அலைகள் துதியில் சொன்ன கூற்று.
படிக்க பழகுக புகழ் பெருக.