தியாகம்

தியாகத்தை வாழ்நாள் வரை
மனிதன் அங்கீகரிப்பதில்லை
மரணத்திற்கு பிறகே
அங்கீகரிக்கப்படுகின்றன .............

ஆம் ,
இது எல்லா உத்தமர்களுக்கும் பொருந்தும் ............

வாழ்நாள் வரை அவரை
உலகம் வெறும் மனிதராகவே பாவிக்கிறது
ஓர்நாளும் அவரின் தியாகம்
உச்சத்திற்கு உயர்த்தப்படுவதில்லை .............

நாட்டில் நிறைய அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள்
ஆமாம் , அவர்களுக்கு எல்லாமே தெரியும்
அவர்கள் மட்டுமே அதிபுத்திசாலிகள் .........

அடுத்தவர்கள் வளர்வது
அவர்களுக்கு ஆபத்தாயிற்றே -
பின் எப்படி சாத்தியமாகும்
தியாகத்தின் அங்கீகாரம் ...........

அதிகார பதவிகளில்
அசட்டு திமிர்தான் ஆட்சி செய்கிறது
உண்மையான மனிதர்களின்
தியாகங்கள் உறுதி செய்யப்படுவதில்லை ............

எக்காலத்திலும் தன் துதி மட்டுமே
பயிற்றுவிக்கபடுகிறது
தியாகிகளின் தியாகங்கள்
பறிக்கப்படுகிறது ............

உலகத்தில் பொறாமையாலே
புதைகுழிக்குள் புதையும்
மானிடர்கள் வசிக்கும் பூமி
பாரதம் மட்டுமே ..........

இங்கு தியாகிகள்
அங்கீகரிக்க படுவதில்லை
தியாகங்கள் போற்றப்படுவதில்லை ...........

கடமைக்காய் கல்வெட்டுக்களும்
காகித ஒட்டுக்களும் மட்டுமே
விளம்பரத்திற்காக இறுதியாய் அறிவிக்கும்
இவர் தியாகியென்று............

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Aug-15, 9:32 am)
Tanglish : thiyaagam
பார்வை : 63

மேலே