மதில்மேல் பூனை

நள்ளிரவு வேலை
மதில்மேல் பூனை
குதிக்கும் பக்கம் மட்டும்
குழப்பத்தில் .............

சரியென்றும் தவறென்றும்
இரண்டு வழிகளில்
எதை தெரிவு செய்வதென்ற
குழப்பத்தில் ............

பெரும்பானவர்களின் ஆதிக்கம்
தவறான பக்கத்தில் இருக்க
என்ன செய்வதென்ற குழப்பத்தில்
யோசித்தபடியே மதிமேல் பூனை ............

நரகவாதிகளின் நடவடிக்கை
நல்லவர்களின் நடவடிக்கை
இரண்டையுமே கண்டு
இன்னும் குழப்பத்தில் , மதில்மேல் பூனை ...........

எதார்த்த வாழ்க்கை இயல்பான செயல்
நியாயம் தர்மம் என்று
பகட்டு இல்லாமல் இருக்கும்
இன்னொரு பக்கத்தை விட ...........

வஞ்சனை சிரிப்பு
வன்முறை பறிப்பு
மோசடி வாழ்க்கை
கொஞ்சம் மேன்மையாய் தெரிய ............

எதார்த்த பக்கத்தை விட்டு விட்டு
ஏமாற்று பக்கத்தில் குதித்தது பூனை -

பாடம் என்ன ?

பதில் கூறுங்கள் நட்புகளே ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Aug-15, 9:16 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 115

மேலே