மரணத்தை தேடி

மனிதர்களின் அத்தனை அறிவுரைகளும்
அலட்சியபடுத்தப்படுகின்றன , ஆம்
மரணத்தை நோக்கியே மனிதன் பயணிக்கிறான்
விரைவாக ?

அமைதிக்காக சுமூக சூழலை
ஆண்டவன் படைத்திருந்தாலும்
அவசரபட்ட மனிதனின் புத்திக்கு
கலவரங்களே கைவசப்படுகிறது ............

ஆதலால் மனிதன்
மரணத்தை நோக்கியே பயணிக்கிறான் ............

சமூகம் சுமக்கவேண்டிய
சகோதரத்துவத்தை விடுத்து
சாகும் வரம் வேண்டி
கலகத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறது மனித இனம் .............

மதத்தாலும் ஜாதியாலும்
இந்திய தாயின் நிம்மதியினை
காலம் காலமாய் கெடுத்தும்
மனம் மாற மனம் இல்லை .................

அமைதிக்கான வழிமுறைகளும் அறிவுரைகளும்
நீண்டகாலமாய் திணிக்க பட்டும்
திருந்த மறுக்கிறது
கலவர மனங்கள் .............

தேச தியாகிகளுக்கு கூடும் கூட்டத்தைவிட
தேச துரோகிகளுக்கே கூட்டம் அதிகமாய்
நடுநிலையார்கள் நீண்ட குழப்பத்தில் .............

மக்களின் நலன்களுக்காக
போராடியவர்களை எல்லாம்
மானுடம் எளிதில் மறந்துவிடுகிறது -
வரலாறு மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறது .......

அதிகார மைய்யங்களில் இருந்து வரும்
உத்திரவுகளில் கூட
அவரவர்கள் சுயநலமே
முன்னிலை படுத்தப்படுகிறது ............

ரத்த தானங்களும்
உடல் உறுப்பு தானங்களும் பெருகிய போதிலும்
கலவரத்தின் பசிக்கு உடல் உறுப்புகள் உணவாகின்றன
உதிரம் நீராகின்றன .............

தன்னுடைய எல்லா தவறுகளுக்கும்
தானே நியாயத்தை கூறும் மனித இனம்
மரணத்தை நோக்கியே பயணிக்கிறது ,
இன்றைக்கு இல்லை என்றைக்கும் .............

கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Aug-15, 8:51 am)
Tanglish : maranathai thedi
பார்வை : 320

மேலே