ஓரு பார்வை தந்தாயே
ஓரு பார்வை தந்தாயே - என்
காதல் தேவதையே
ஓரு வார்த்தை சொன்னாயே - என்
ஜீவன் பாடியதே
இரு விழிகள் காண இமைகள் பேச
காதல் சுகமானதே
இதயம் நாட உயிரும் தீண்ட இளமை
சுகமானதே
(ஓரு பார்வை தந்தாயே)
நீ போகும் பார்வையில் நிழலாக
தொடர்பவன் நான்
நீ வாழும் பூமியிலே உன்னைக் காக்கும்
காவலன் நான்
நீ விடும் மூச்சினிலே உயிர்வாழும்
ஜீவன் நான்
நீ தந்த காதலிலே கவி எழுதும்
புலவன் நான்
கனவுகள் தந்தவள் நீயே - என்
கவிதையில் மலர்ந்தவள் நீயே
நினைவினில் பதிந்தவள் நீயே - என்
உயிரினில் கலந்தவள் நீயே
(ஓரு பார்வை தந்தாயே)
பூக்களின் சோலையில் புன்னகை அரசி நீ
இரவு தூங்கும் வேளையில் வானத்தின்
பெளர்ணமி நீ
இதயமெனும் கடலில் அலையாக
வந்தவள் நீ
கண்கள் பேசும் வார்த்தையிலே
காதலாக வந்தவள் நீ
மழையில் சாரலில் நீயே
மனசுக்குள் இசைப்பவள் நீயே
காற்றிலே கலந்தவள் நீயே
மூச்சினில் இணைந்தவள் நீயே
(ஓரு பார்வை தந்தாயே)