தேடல்களில் தொலைந்தோம்

..."" ""...

வயிற்றுக்கு இரையென்று
இரவென்றும் பகலென்றும்
அலையாய் அலைந்தேனாம்
உறக்கமில்லாது உழைத்து
இன்பத்தை கோட்டைவிட்டு
இயந்திரமாய் வாழுகிறோம் !!!

இயற்கையினை ரசிக்காமல்
இளமையினை ருசிக்காமல்
எல்லைகள் நிர்ணயமில்லாத
வாழ்க்கையின் அத்தியாயம்
முடிந்தவரையில் ஓட்டமா
முடியும்வரைலே ஓட்டமா !!!

இறைவானுக்கு நன்றியிலா
உதவியோருக்கு நன்றியிலா
உறவுகளை உதறிவிட்டே
நிம்மதியில்ல பயத்தோடு
நித்தமும் நாடிச்செல்லும்
எதற்காயிங்கு நம் உழைப்பு !!!

வாழ்க்கையின் ஆசைகளை
பூர்த்தி செய்யவிட ஓடியோடி
பந்தயத்து குதிரையானாய்
ஓடிவந்து நாம் நிற்கையில்
நுரை சிந்தும் மூச்சிரைப்பே
நாமக்காயிங்கு மிச்சமாகும் !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (4-Aug-15, 4:56 pm)
பார்வை : 68

மேலே