மரண கவிதை
கேப்டன் யாசீன் கவிஞர்
மரணம்
வாழ்க்கையின்
இறுதிப் பரிசு.
பொறாமை வரவழைக்காத
பொக்கிம்.
விடை இல்லாத
விந்தை வினா.
வெல்ல முடியாத
எதிரி.
எல்லாவகை கர்வத்தையும்
சுக்கு நூறாக மாற்றும்
சூட்சுமம்.
மரணத்தைவிட
மிகச் சிறந்த சமத்துவவாதி
வேறு எவருமில்லை.
மரணம்
மறக்கமுடியாத பாடம்.
இதில்
பாடம் கற்காத
முட்டாள்கள் நாம்.