நான் நிலா கொஞ்சம் நட்சத்திரங்கள் -கார்த்திகா
இருள் வானின் நீள் பக்கங்களில்
சலனங்களற்றுத் திறக்கிறேன்
சுவடுகள் அற்ற என்
பாதங்களை தீண்டும் முன்பனி
கரங்களை சேர்க்கும்
குளிர்க் காதலன்
உயிர் இழையோடும்
மெல்லிய மூச்சுக் காற்று
நட்சத்திரங்கள் புடை சூழ
புவி வலம் வரும் நிலவில்
என் பெயர் எழுதி இருக்கிறது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
