கவிதை எனும் சாரல்
சந்தோசத்தில் வராது -
சங்கடத்தில் வரும்,
காரணக் க(வி)தை.
உற்சாகத்தில் தோணாது -
உத்வேகத்தில் உதிக்கும்,
எழுச்சி (க)விதை.
மிரட்சியில் ஒளிராது
வறட்சியில் ஒலிக்கும்
'உப்புச' கவிதை.
வாலிபத்தில் வருவது
வசந்த கவிதை
வயொதிகத்தில் அனுபவமே
சோக கவிதை
காதலின் சுவாசத்தில் ஆரம்பம்,
இதயத்தில் இனிக்கும் ஈர்ப்பே கவிதை!
முடிவில், ஒரு காந்தலில் உவர்க்கும்
உமிழ் நீரே கவிதை.
தன்னிலை அறிய
தார்மீக கவிதை,
சமுதாயக்கண்ணில்
சாளரக் கவிதை;
கவிதை ஒரு உணர்வு பிரவாகம்,
அல்லது ஓர் மெல்லிய சாரல்,
மென்மையான தூறல், இல்லை எனில்,
மேன்மையான தீண்டல்.