என் பணி

என்னவளை பகலில் ரசிப்பதும்
இரவில் நினைப்பதும் என்று
விழாக்காலம் போல் இருக்கிறது
திங்கள் தொட்டு வெள்ளி வரை என் வாழ்கை!

இருந்தும் சனி ஞாயிறு விடுமுறை வந்துவிடுகிறது
வாரந்தோறும் என் கண்ணீர்ப் பார்க்க!

பலர் திட்டித் தீர்க்கும் திங்கள் அருகில் வந்ததும்
எனக்கு மட்டும் திகட்டாத இன்பமாய் இருக்கிறது
என்னவளை காணப்போகிறேன் என்ற அந்த ஞாயிறு முடிவு!

எழுதியவர் : ஆர்த்தி (5-Aug-15, 8:53 pm)
Tanglish : en panay
பார்வை : 132

மேலே