நட்பு

நட்பு

நட்பு இது மரணத்தை நீட்டிக்கும்
மந்திர வார்த்தை அல்லவோ -
மறுக்க ஆளுண்டா ?

விரோதிகளை விருந்தினர்களாக
மாற்றும் வித்தையில்
நட்பு மட்டுமே கைதேர்ந்திருக்கிறது...........

உபதிரங்களுக்கு இடமில்லாமல்
உதவிகளுக்கு மட்டுமே
நட்பில் சாத்தியம் .............

பிறப்பு முதல் இறப்பு வரை
எல்லா அனுசரிப்புகளிலும்
நட்பிற்கு இணை இல்லவே இல்லை ..........

ஒளியை சுடர்விட்டு
உருகி கரைந்துபோகும்
மெழுகோடு நடப்பின் தியாகமும் ஒருசேர்ந்ததே .........

எங்கோ பிறந்து இணையாய் வாழ்ந்து
உறவுகளை மிஞ்சும் உன்னத தியாகத்தில்
உயிரும் உடமையும் துச்சமாய் ..............

எதிரிகளின் எண்ணிக்கையை குறைப்பதில்
நட்பின் சூழ்சமம் தோற்றதாய்
அனுபவம் இல்லை .........

இடறி விழுந்தவர்களை
இமயத்திற்கு உயர்த்தும்
இதயபூர்வ நேசிகளின் கூடாரம் நட்பு ...........

பாலைவன தோட்டங்களிலும்
பசுமை பூத்து பூங்கவனமாய்
புற்றுயிர் பெறுவதும் நட்பில்தான் ...........

கடந்த நரகங்களை மறந்து
கடக்கபோகும் காலத்தை
சொர்க்கமாய் மற்றும் சக்தி நட்பிற்க்கே உரியது .........

அறுவடைக்கு அவசியமில்லை-
நட்பில் விதைப்புகள் மட்டுமே ,
விளைவது சுதந்திர சொர்க்கம் ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (7-Aug-15, 8:58 am)
Tanglish : natpu
பார்வை : 493

மேலே