யார் இவள்-மது

காக்கை சிறகில் கூடுகட்டி
கிளியின் வீட்டில் பசியாறும்
யார் இந்த பைங்கிளி !

கள்ளிபழ உதட்டில்
ஏறும்பையே பசியாற்றும்
யார் இந்த இனிப்புகாரி !

வேர்வைகள் இளைப்பாற
இடுப்பில் ஊஞ்சல் கட்டிய
யார் இந்த இடுப்பழகி !

நான் குளிக்கும் தொப்புளை
மயிலிறகில் மூடிவரும்
யார் இந்த தேரழகி!

கண் இமைகளில்
கதிரவனையே சூறையாடும்
யார் இந்த கொள்ளைக்காரி!

கவிவர்மன் செதுக்கிய புருவங்களோடு
வீதி உலா வரும்
யார் இந்த பேரழகி !

இதழ் சிரிப்பில்
வெக்கத்தை கடனாய் கேட்கும்
யார் இந்த தொட்டசினிங்கி!

நிலவே
பொறாமை கொள்ளும்
யார் இந்த நிறத்தழகி!

போர் புரிய வரும் மன்னர்களுக்கு
நுனி நாக்கில் சவால் விடும்
யார் இந்த திமிர்காரி !

புறாவின் மேனியும்
பூவிதழ் சிரிப்பும் கொண்ட
யார் இவள் ?

யார் நீ ?

பத்து வயதில் பசியாற்றினான்
பக்குவமாய் பசியாறினான்

பள்ளிக்கு பால் டப்பா எடுத்து சென்ற என்னை
பாலியல்பலாத்காரம் செய்தான்

மாதவிடாய் திறக்கும் முன்னே
மானியம் பார்க்க தொடங்கிவிட்டான்

பெத்தவள் தாசியாம்
அதே பட்டம் எனக்கும் ...................பத்து வயதில்.......!


ஆண்களின் வியர்வை துளியோடு
சத்தம் இல்லாமல் என் கண்ணீர் துளிகளும் பயணிக்கும் !

கனவுகள் கூட கனவில் தான் யோசிக்கிறேன்
கல்லறை எப்போது என்று
வாழ்க்கை வெறுத்து இருபது வயதில் ..............


மதுவிலக்கு போராட்டமாம்
மனதை தேற்றுகிறேன்
மது(என்னை) விடுவிக்க ஒரு போராட்டம் என்று

இப்போது தெரிகிறதா நான் யார் என்று! முடித்தாள்.



நான் ????????????????????????????????????????



ஆடவரை பலசாலியாய் இறைவன் படைத்தது
பெண்களை பாதுகாக்க தான்
பலவந்தம் படுத்த அல்ல

எழுதியவர் : மடந்தை -ஜெபக்குமார் (7-Aug-15, 4:05 pm)
பார்வை : 351

மேலே