புது உறவு
புது உறவு!!!
......................
பணத்துக்காய் தன்
இனம் வெறுத்து
தனித்து விலகி
தாவும் விலங்கு போல
தடை தாண்டுதல் முறையா?
குணம் மாற்றி
கோணலாய் குலம் மறந்து
குறுகும் மனம்கொண்டு
காத துரம்
செல்வது சரியா?
குணம் குறுக
கொண்ட பணம் மேவ
கொடை பாவம் என்றெண்ணி
கொடை மறுத்து
தலை மறைதல் முறையா?
செல்வம் கொண்டவர்
சிறப்புப் பெற்றவர்
தான் சேறும் உற்றவர் என்றே
தலை தூக்கி பெருமையாய்
உரைப்பது முறையா?
மனம் வெதும்பும் உன் உறவுகள்
சினம் மறந்து
என்றும் உனை விரும்பும் !!
செல்வம் உனைப் பிரிந்திடில்
மறையும் உன் புது உறவுகள்!!