யார் அழகு

தேன் எடுக்க
தேனீக்களுக்கு சுறு சுறுப்பு
தேநீர் பருக
நமக்கு சுறு சுறுப்பு !
$
வாடினால்
மலருக்கு மணம் இல்லை
நீ வாடி நின்றால்
உனக்கு நாளை இல்லை !
$
துயிலில்
கனவுகள் அழகு
நிஜத்தில்
அனுபவங்கள் அழகு !
மதுவால்
அரசுக்கு வருமானம்
மது அருந்தினால்
ஏழைக்கு மரணம் !
மது விலக்கு
அடுத்த தேர்தலுக்கு ஆதாயம் !
$
உடல் வளர்ந்தால்
நீ ஒட்டகை சிவிங்கி
உன் உள்ளம் உயர்ந்தால்
நீ மனித சாதி !
$
பெண்ணுக்கு மலர் அழகு
மலருக்கு பெண் அழகு
இரண்டிற்கும் கவிதை அழகு
கவிதைக்கு யார் அழகு ?
........................................... நிரப்பவும்
----கவின் சாரலன்