எதனை எதிர்பார்க்கிறாய்

எழுந்து நடடா இளந்தமிழா !
இன்னும் எதனை எதிர்பார்க்கிறாய்.....?

வீரம் வேண்டுமா ?
பாரதி பாட்டில் கிறுக்கன் கூற்றில்
வெளியே தெரியவில்லையா ?
அதிலிருந்து கொஞ்சம்
எடுத்துக்கொள்....

சாரம் வேண்டுமா?
விவேகானந்தரைத் தொட்டு
அப்துல் கலாம் வரை
ஆயிரம் பேர்
எழுதி வைத்துள்ளார்கள்
அதிலிருந்து கொஞ்சம்
ஏந்திக்கொள்....

வேகம் வேண்டுமா ?
இருக்கிறதே இயற்கைக் காற்று
அதன்
வாலினைப் பற்றி
காலத்தின் ஊடே
காற்றோடு கடுகி
விரைந்துபோ...

தேகம் வேண்டுமா?
தேய்ந்து போனாலும்
எப்படியோ வளரும்
நிலா
உனக்கு பாடம் கற்பிக்க வில்லையா ?
படிக்குக் கொண்டு
வளர்ந்துகொள்.....

எப்படியாவது எழுந்திரு
தூக்கம் சோர்வைத் தரும்
கனவைத் தராது
விழித்துக்கொள்....

உனது அக்னிப் பார்வையால்
மதுக் கடைகளை
முழுதாக எரிக்க
முனைந்துசெல்.....

இன்னும் என்ன தாமதம் ?
எதற்காகக் காத்திருக்கிறாய் ?
எதனை எதிர்பார்க்கிறாய் ?

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (8-Aug-15, 10:15 am)
பார்வை : 146

மேலே