தூயத்தமிழ்
நான் பேசும் தமிழ்..
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினால் தானே
இவ்வுலகம் மதிக்கிறது,
உணர்வுக்கு இடம் அளித்து,
எழுச்சிக்கு ஏணி அமைத்து,
நான் பேசும் தமிழுக்கு,
பாரதியின் மறுமலர்ச்சிக்கு,
வள்ளுவனின் வாக்கினுக்கு,
கம்பனின் கவிக்கு,
இங்கு மரியாதை இல்லையே….
”தூயத்தமிழ் பேசுபவனுக்கெல்லாம் ஆங்கிலம்
தெரியாது என்று எண்ணாதீர், அவர்களுக்கு
ஆங்கிலம் ஒருவித மொழி, ஆனால் தமிழோ
அவர்களுக்கு அங்கத்தில் இணைக்கப்பட்ட உயிர்