நிவேனிதா - காதல் தொடர் - பாகம் 4 - உதயா

தொலைப் பேசியில் உரையாடலின் போது அவள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் அளவிடமுடியாத அன்பும் , ஏக்கமும் மேலோங்கி இருந்தது . சில நேரங்களில் நிவேனிதாவிற்கு இரவு நேரங்களில் மரண பயம் வந்துவிடும் . இன்று இரவு உறங்கினால் மறுநாள் கண்விழிப்போமா என்ற வினாவும் அச்சத்தோடு இணைத்தே பிறந்து விடும் .

அவள் ஒவ்வொரு முறை உணரும் மரண பயத்தின் கணப்பொழுதுகள் கலையரசனின் கண்ணீராலே கரைக்கப்படும். ஆம் அவளுக்கு அச்சம் தோன்றும் போதெல்லாம் தொலைப் பேசியை எடுத்து கலையரசனை அழைத்து விடுவாள். கலையரசனை அழைத்ததும்

" மாமா எனக்கு பயமா இருக்கு டா , எனக்கு நீ வேணும் மாமா , மாமா மாமா மாமா என்னாலா வலி தாங்க முடியல டா "

என அவள் தொலைப் பேசியில் கலையரசனிடம் துடிக்கும் போது அவன் கண்களில் கண்ணீர் தீர்ந்து போய் குருதி வடிய தொடக்கி இருக்கும்

" நிவி ,செல்லம், தங்கம், அம்மு அழாதடா பட்டுமா இன்னும் கொஞ்சம் நாள்ல எல்லாம் சரியா போய்டும் டா " என அவன் சமாதனப்படுத்தினாலும்

" போ மாமா எப்பவும் இப்படியேதா சொல்லுற, மாமா எப்படா எனக்கு சரியாகும், " என அவள் வினாமேல் வினாவினை எழுப்பிக் கொண்டே இருப்பாள். அவளை எப்படியோ சமாதனப் படுத்தி உறங்க வைத்துவிடுவான் கலையரசன்.

ஒருநாள் அவர்களின் தொலை பேசி உரையாடலின் போது அன்று அவளின் வீட்டில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்தை சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தனது தம்பி சஞ்சைதேவாவிடம் சஞ்சய் எனக்கும் ஒரு கப் டீ வேணும் என கேட்பதற்கு மாறாக கலை எனக்கும் ஒரு கப் டீ என்று கேட்டுவிட்டாளாம்.இது நிவேனிதாவின் அம்மாவின் காதில் விழுந்ததும் "டேய் சஞ்சய் நீ எப்போடா பேர மாத்துன உங்க அக்கா உன்ன கலைனு சொல்லுறா பாரு " என சொன்னதும் " மா போங்க மா உங்களுக்கு வர வர காதே கேக்குல " என சஞ்சய் சொல்லியது அவளுக்கு சிரிப்பு வந்து விட்டதாம்

நிவேனிதாவிற்கு உடல் நிலை குறைவினால் அவர்கள் நேரடியாக சந்தித்து கொள்ள முடியவில்லை. இவர்களின் காதல் மட்டும் தொலைப் பேசியின் உதவியுடன் நந்தவனமாய் மலர்ந்துக்கொண்டே
இருந்தது. ஒருநாள் மதியம் நேரத்தில் கலையரசன் நிவேனிதாவிற்கு தொலைப் பேசியில் அழைப்பு விடுக்கும் போது அவள் உறங்கி கொண்டிருந்ததாள் அவளால் அழைப்பினை ஏற்க முடியவில்லை.

வழக்கம் போல இரவு நேரங்களில் அவளுடன் முகனூலில் பேச காத்திருந்த கலையரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது காரணம் நிவேனிதா முகனூல் பக்கமே வரவில்லை. அவளது தொலைப் பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. கலையரசனின் மனதினில் தோன்றக் கூடாத எண்ணங்களும் தோன்ற தொடங்கின
இரண்டு நாட்கள் கழிந்த பிறகு நிவேனிதாவிடம் இருந்து முகனூலுக்கு ஒரு சேதி வந்தது

" மாமா நான் ஹோச்பிடல்ல ( hospital ) இருக்க , எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்க நீ பயப்படாத" என்று

கலையரசனுக்கு இப்போது பயம் கொஞ்சம் அதிகமாகி விட்டது ." நிவிக்கு என்ன ஆச்சி ஏன் அவ அங்க இருக்க " என்று

" நிவி உனக்கு என்ன ஆச்சி டி ஏன்டி ஹோச்பிடல்ல இருக்க " என கலையரசன் அவளிடம் கேட்டான்

" மாமா நீ டூ டேஷ்க்கு முன்னாடி கால்(call ) பண்ணல , அப்போ நான் தூங்கினு இருந்த , மம்மி போன் எடுத்து பாத்துட்டு யாரு கலைன்னு கேட்டாங்க நான் எல்லாத்தையும் சொல்லிட மாமா . அப்புறம் மம்மி என்கிட்ட சொன்னாங்க நிவி நீ இன்னும் கொஞ்சம் டேஷ்ல செத்து போய்டுவ உனக்கே தெரியும். நீ தான உன்ன லவ் பண்ணுற பையனுக்கு எல்லாமே , நீ போய்டா அவங்க லைப்பே அவ்ளோதா நிவி. நீ இப்பவே அவங்க கூட சண்ட போடு நிவி நீ அவங்ககிட்ட பேசாதாணு சொன்னாங்க மாமா, நான் சண்ட போட
முடியாது சொன்ன, அதுக்கு மம்மி சொன்னாங்க நிவி நீ அவங்க கூட சண்ட போடுலனா நீ சாகுற வரைக்கும் உன் கூட பேசவே மாட்டணு சொன்னாங்க மாமா , அதா நான் அழுது அழுது எனக்கு பீவர் வந்துடுச்சி மாமா " என அவள் சொல்லி முடித்தாள் .

அதன் பிறகு நிவேனிதாவின் அம்மா அவளுடன் பேசவே இல்லை என்றும் சொல்லியிருந்தாள் கலையரசனிடம் . அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நிவேனிதாவை பார்த்துக் கொள்ளும் அவளது தாயே அவளிடம் பேசவில்லை என்றால் அவளை வேறு யார் பார்த்துக் கொள்வார்கள்.

கலையரசனின் மனம் பல கோணங்களில் சிந்தித்தது . வேறு வழியின்றி மறுநாள் மதியம் அவளுடன் முகனூலில் பேசும் போது " நிவி நான் உன்ன விட்டு போறடி உன் லைப்ல இருந்தே நான் போறேன் " என சொல்லிவிட்டான் காரணம் இவன் விலகி விட்டால் அவள் அம்மா அவளுடன் பேசுவாள் என்று நினைத்தான். அவள் அழுது கொண்டே

" மாமா என்ன விட்டு போறியாடா போ " என்று அவளும் சொல்லிவிட்டாள்.

அந்த கணத்தில் இருந்து அவள் மருத்துவமனை என்று கூட பார்க்காமல் அழுது கொண்டே இருந்தாள். அந்தநாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்கவே இல்லை. இவள் அழுவதை பார்த்து அனைவருக்கும் பயம் வந்துவிட்டது " ஏன் இந்த பெண் இப்படி அழுகிறாள் " என்று. அவள் உடனே இருந்த அவளது தந்தைக்கும் இவள் அழுவதை பார்த்து பயம் வந்து விட்டது.

கலையரசன் நிவேனிதாவிடம் உன்னை விட்டு போகிறேன் என்று சொல்லியிருந்தும் அதை அவன் மனதார சொல்லவில்லை வழக்கம் போல அன்று இரவும் அவன் முகனூலுக்கு வந்தான். முகனூலினை திறந்து பார்த்ததும் நிவேனிதா போட்டோ அனுப்பி இருத்ததை பார்த்தான். அதனை பார்த்த பிறகு அவன் கண்களில் கண்ணீர் கடலாக மாறி போனது . அவள் தனது கையினை கத்தியால் கிழித்த போட்டோவை தான் அவள் அனுப்பி இருந்தாள்

" ஐயோ நிவி ஏன்டி இப்படி பண்ண நான் உன்ன விட்டு போறனு சொன்ன உன் அம்மா உன்கூட பேசுவாங்கன்னு நெனச்சி தான்டி அப்படி சொன்ன அதுக்கு ஏன்டி இப்படி பண்ண " என்று அவன் கதறினான் துடித்தான்

" மாமா நீதா எனக்கு எல்லாமே , நீதா மாமா எனக்கு உலகம் எனக்கு யாருமே வேணா மாமா , நீ மட்டும் தா வேணும் டா , நீ அப்படி சொன்னதுமே எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெர்ல மாமா , இனிமே அப்படி சொல்லுவியா மாமா " என்று அவள் அவன்மீது பைத்தியமாகவே மாறியிருந்தாள்.

" பொண்டாட்டி இனிமே அப்படி சொல்ல மாட்ட அம்மு , செல்லம் , குட்டிமா , தங்கம் , வைரம் , பட்டுமா , மாணிக்கமே, பவள முத்தே , மரகதமே, புஜ்ஜிமா " என அவன் அவளை கொஞ்சிக் கொண்டே இருந்தான்

" ஹப்பா இதுக்காகவே இன்னொரு டைம் கைய கட் பண்ணுலா மாமா .... மாமா லவ் யு மாமா ... லவ் யு கருவபயலே .. " என்று அவள் தனது கை வலியினை மறந்து எங்கோ காதல் வானில் பறந்துக் கொண்டிருந்தாள்

" பொண்டாட்டி லவ் யு டி கருவாச்சி " என அவன் சொல்லும் போது " மாமா மம்மி போன் பண்ணுறாங்க டா " என அவள் சொன்னவுடன் " அப்படியா பேசு டி " என்றான் கலையரசன்.

(காதல் மலரும் )..............

எழுதியவர் : உதயா (8-Aug-15, 8:49 am)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 943

மேலே