08-08-15 காளியப்பன் கவிதையும் கன்னியப்பர் உரையும்-07

காளியப்பன் கவிதையும் கன்னியப்பர் உரையும்-07

வடித்த மதுக்கடை வாசலில் நித்தம்
ஒடித்த கதிராய் உறங்கும் – பிடித்து,கை
விட்டவன்! நாங்களோ விற்ற,எம் வாக்குகளால்
கெட்ட குடியரசின் கேள்!
(கேள்=உறவு)
பதவுரை:
வடித்த=காய்ச்சி வடித்துத் தயாரித்த
மதுக்கடை வாசலில் =சாராய/மதுக்களை விற்கும் கடையின் வாசல்களில்
நித்தம்=.நாள்தோறும்
பிடித்து,கை விட்டவன்!=எம்மைக் கைப்பிடித்து மணம் செய்து பின்
(மதுவால்) கைவிட்டுப்போனவன்
ஒடித்த கதிராய் உறங்கும்=பறித்து வீழ்த்திய கதிர்துண்டுகளைப்போல மயங்கிக் கிடக்கும்
நாங்களோ=அவனால் கைவிடப்பட்ட அபலைகளாகிய நாங்களோ
விற்ற,எம்= பொறுப்பாகச் செலுத்தாமல் கிடைக்கின்ற காசுக்கும் இலவசங்களுக்கும் ஏமாந்து அளித்த
வாக்குகளால்=தேர்தல் வாக்குகளால்
கெட்ட குடியரசின் கேள்!=கெட்ட்ப் போன கமக்களரசுக்கு னண்பர்கள் விட்டோம்!
கருத்துரை:
எங்கள் கைபிடித்து மணம் செய்த கணவன்மார் தினமும் மதுவருந்தி, மதுக்கடை வாசலில் ஒடித்த கதிராய் தன்னை மறந்து உறங்கி எங்களைக் கைவிட்டு விட்டார்கள்; ஆனால் அரசியல் வாதிகளுக்கு எங்கள் ஓட்டுகளை பணத்திற்கு விற்றதனால அமைந்த தவறான மக்கள் அரசுக்கு நாங்கள் நண்பர்களாமோ என்று மனைவிமார்கள் வேதனைப் படுவதாக வருத்தப்படுகிறார் கவிஞர் எசேக்கியல்.
ஆராய்ந்தறிந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யாததால், அவர்கள் குடியைக் கொண்டுஅந்து அதனால் எமது கணவன்மார்கள் எங்களைக் கைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டதாக வருந்திக் கூறுவதாக உள்ளது.
========== =================

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Aug-15, 12:34 pm)
பார்வை : 48

மேலே