காளியப்பன் கவியும் கன்னியப்பர் உரையும்--06
காளியப்பன் கவியும் கன்னியப்பர் உரையும்--06
மதுக்கடை கண்டு மயங்கிக்,கை விட்டோர்
ஒதுக்கிய சாக்கடை ஊற்றாம் – புதுக்குலம்
எங்களுக் கென்ன இடவொதுக் கீடளிப்பீர்?
சங்கமும் வேண்டின் சரி!
பதவுரை: (Dr.Kanniappan)
மதுக்கடை கண்டு= அரசினால் நடத்தப்பட்டுவரும் சாராய, மதுக்கடைகள்ப் பார்த்தபின்,
மயங்கி= எங்கள் மயக்கத்திலிருந்து விடுபட்டு,அதன் மயக்கித்தில் ஈடுபட்டு
கைவிட்டோர்= அவர்தம் மனைவியராகிய எங்களைப் புறக்கணித்து
ஒதுக்கிய= தள்ளிவைக்கப்பட்ட
சாக்கடை ஊற்றாம்= கழிவி நீர் மடைபோல் கண்ணீர் பெருக்குகின்ற எங்களை
புதுக்குலம்= புதிதாக உருப்பெற்று வளர்ந்துவரும்
எங்களுக்கு என்ன= எம்போன்றவர்களுக்காக எந்த வகையில்
இடவொதுக்கீடு அளிப்பீர்?= வரும் தேர்தல்களில் பெண்களுக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு என்பது போல எவ்வகையிலான இடவொதுக்கீடு முறையைக் கொடுக்கப்போகிறீர்கள்?
சங்கமும் வேண்டின் சரி= அதற்காக, நாங்கள் சங்கள் அமைத்துப் போராட வேண்டினும் அது எங்களுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றே.
கருத்துரை: (DrKanniappan).
மதுக்கடையைக் கண்டதும், வீடு, மனைவி, மக்களை மறந்து மதுவருந்தி தங்கள் சுயபுத்தி யையும் இழந்து கணவன்மார்களின் கவனிப்பின்றி சாக்கடை ஊற்றுகளாக ஒதுக்கப்பட்டு கைவிடப்பட்ட புதுக்குலக் கூட்டமாக இருக்கும் எங்களுக்கு என்று தனி இடஒதுக்கீடு செய்யும் நோக்கமும் கரிசனமும் அரசுக்கு ஏதும் உண்டா? அதற்காகக் கணவன்மார்களால் கைவிடப்பட்ட மனைவியர் என்ற சங்கம் அமைத்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் சரி என்று மனைவிமார்கள் மனம் வெதும்பி கூறுவதாக அரசைச் சாடுகிறார் கவிஞர் எசேக்கியல்.
தாழ்த்தப் பட்டு, ஒதுக்கப்பட்டவர்களாகத் தாய்மார்கள் ஆகிவருகிறார்கள்; அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு தனியான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதினை வலியுறுத்துவதாக இது கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வலையில் விழுந்த மீங்கள் என்றும், விலையில்லாத பொருள்கள்போல் உள்ளோம் என்றும் வருத்தியதாகக் குறிப்பிட்டுள்ளதோடு இது ஒப்புநோக்கத்தக்கது.
=========================== ======================
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
