சாத்தியமாக் கூறு
முகிலில்லா மாரி
அலையில்லா ஆழி
விதையில்லா வேர்
மரமில்லா வனம்
எழுத்தில்லா சொல்
வெண்டளையில்லா வெண்பா
பக்கமில்லா புத்தகம்
வினாயில்லா விடை
முரண்பாடில்லா மதம்
விதிவிலக்கில்லா விதி
நேற்றில்லா நாளை
இவையனைத்தும்
சாத்தியப்பட்டால்...
நீயில்லா நான்!