அழகிய நிலவிற்கு நினைவின் கடிதம் 555

பிரியமானவளே...

நீயும் நானும் எதிரெதிரே
சந்தித்து கொண்டோம்...

எதார்த்தமாக என் தோளினை
உரசி சென்ற உன்னை...

என் விழிகள் முறைத்தது
உன் இதழ்கள் புன்னகை தந்தது...

ஒவ்வொரு நேரமும் நீ என்னை
பார்க்கும் போதெல்லாம்...

இதழ் பிரியாமல் புன்னகை
கொடுப்பாயடி...

உன் புருவமோ நலம்
விசாரிக்கும்...

என் இதழ்களோ
புன்னகை மட்டுமே...

நீ தாவணி உடுத்தாமல்
வரும் நாட்களில்...

கேள்வி கேட்கும்
என் விழிகளுக்கு...

உன் விழிகளின்
பதில் இதோ என்று...

ஒன்றாக நாம் அமர்ந்து
உணவருந்தவில்லை என்றாலும்...

உன் கைகளால் சமைத்த உணவை
உண்ணும் நாட்களில்...

எனக்குள்ளே ஒரு
பேரானந்தம்...

நான் உன்னை நிலா என்று
அழைக்கும் போதெல்லாம்...

நான் என்ன அவ்ளோ
அழகா என்பாய்...

உன் வீட்டு கண்ணாடிக்கு
தெரியுமடி...

நான் சொல்ல தேவையில்லை
என்பேன்...

கன்னம் சிவப்பாயடி
வெட்கத்தில்...

நிலவே உன்னை பற்றி நான்
எப்போது நினைத்தாலும்...

என் மனதுக்குள் சந்தோசம்
உண்டாகுதடி...

ஏனடி ஆண்டுகள் பல
கடந்தும்...

நீ கொடுக்கும் சந்தோசம் மட்டும்
இன்னும் மாறவில்லை...

ப்ரியமுடன் உன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Aug-15, 3:51 pm)
பார்வை : 74

மேலே