கணவன் புராணம்
கணவன் புராணம்
மனைவி புராணம் பாடுவோர் மத்தியில்
இவள் கணவன் புராணம் பாடுகிறாள்
கனா கணவன் வாய்க்கவில்லை
வாய்த்த கணவனில் குறையுமில்லை
கண்ணகியா என் மனைவி
இவன் ராமனாக வாழ்கின்றான்
என் நிலை உயர
தன் நிலை கொடுக்கிறான்
என் தவறின் முன்னால் நிற்கின்றான்
என் வெற்றியின் பின்னால் நிற்கின்றான்
அன்பே ஆருயிரே வார்த்தைகள் இல்லை
அவன் அனுசரிப்பில் அத்தனையும்
பெற்றவனை உற்றவனில் காண்கின்றேன்
நீர் தொட்ட என் நிர்வாணம்
நீ தொடா இசைத்தேன்
தாய் என்ற சொல் ஆனானேன்
என்றும்,
கமலக்கண்ணன்