என்ன சொல்லுது என்னிதயம்---------------------------நிஷா
(காதல் வயப்பட்ட தலைவி தோழியிடம் தன்னிலை விவரிப்பதாய் ஒரு சிறு கற்பனை)
மின்னலென வந்துதித்த
எண்ணம் ஒன்று என்
மனதில் சின்ன சின்ன
ஆசைகளைத் தட்டிவிட
மெய்மறந்து நிற்கிறேன்
என் தோழி......
வேதியியல் மாற்றம் பற்றி
வெறுமனே படித்து வந்தேன்... இன்று
விறுவிறுப்பில் என் இதயம்
வியர்க்கையிலே.....
விந்தை புரியாமல் நான்
விழிக்கிறேன் தோழி.....
காதலுக்கு மற்றுமொரு மாலை சூட்டி
கட்டுப்பாடு அற்று போய்
கால்விரல்கள் கோலமிட
கன்னியிவள்.....
தலைகுனிந்து தடுமாறி
தவித்துத்தான் போகிறேன் தோழி......
நேசம் எனும் பூக்கள் தேடி
நெடுதூரம் வந்து விட்டேன்
விலகாத அவன் பார்வை
வேறு என்ன சொல்லுதடி....
கலங்காத என் நெஞ்சம்
காதல் உணர்வில் கிறங்குதடி......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
