பேசாதே தோழி

பேசிவிடாதே! தோழி..
குற்றம் ஒன்று இழைத்துவிட்டேன்
அன்பு காட்டுகையில்
அன்னையாய் உருமாறும் நீ
தவறிழைக்கையில்
தந்தையாய் கண்டிப்பாய் என மறந்து..
தண்டிக்க வேண்டுமாயின்
சொல்லால் திட்டிவிடு..
தாங்கிக்கொள்வேன்..
சினம்கொண்டு பார்வையால் பேசிடாதே..
இருதய ரணம் கொண்டு
செத்தே போவேன் நான்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (8-Aug-15, 4:49 pm)
Tanglish : peysathey thozhi
பார்வை : 122

புதிய படைப்புகள்

மேலே