பணம் பணம் பணம்
"காமக்கூத்து ஆடுகையில்
கசிந்து வந்த மனிதனே.
நீ இருந்தாலும் இறந்தாலும்
இரவும் பகலும் பிறலாது.
சதைகள் தீயில் கருகுகையில்
உன்னோடு வருவதேது.
நீ உயர்வென என்னும் பணமும்
தீயில் எரியும் வெறும் தாளு.
காற்றை உண்ண மறந்துவிட்டால்
கருகிப்போகும் மனிதனே.
உயிர் காற்றை உருவாக்கும் சூத்திரம்
உன் பணமும் அறியுமோ?.
ஓடு தெரியும் தலையினிலே
புது மயிரு நாட்டும் மனிதனே.
கூடு விட்டு ஆவி போனால்
கூட்டி வருமோ உன் பணமுமே?.
கோடி கோடி கோடியென
கோரப்பசி வேளையிலே உன் பணத்தை உண்ண முடியுமோ?
சொத்து கோடி சேர்த்துவிட்டு
செத்துப்போகும் மனிதனே.
வாய்க்கரிசி இட்டபின்னே
உன் வங்கிகணக்கில் லாபம் என்னவோ?
பிறக்கும் போது
ஏதுமின்றி அம்மணமாய் பிறக்கிறாய்.
இறந்த பின்னும் யார் துணையுமின்றி
அம்மணமாய் இறக்கின்றாய்.
இறக்கும் முன்னே உன் இருப்பையெல்லாம்
இரவல் கேட்பவனுக்கு கொடுத்திடு.
இன்னமும் மிட்சமேனில் அதை
தீயிலிட்டு எரித்திடு"