தனியொரு மனிதனுக்கு

தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
இணையத்தை அவசரமாய் உசுப்பி
வெடித்த பூமியிலமர்ந்து
வானத்தை வெறிக்குமொரு
தாத்தாவின் ஒளிப்படம் பகிர்ந்து
இப்படி அர்த்தமற்ற
எதையோ கிறுக்கி முடிக்க
சாப்பாட்டு நேரம் என்பதாலேயே
வீட்டுக்கே கொண்டுவர கட்டளையிடுவோம்
குறியீட்டில் கொழுத்த
பொத்தானை அழுத்தி
சிக்கன் பிரியாணி வித் மட்டன் சுக்கா..
இறக்குமதி அரிசியினை
உண்ண மறுக்கும் தாத்தாவே
இருந்துவிட்டுப் போகட்டும்
அந்தத் தனியொரு மனிதனாக..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-Aug-15, 9:22 pm)
பார்வை : 89

மேலே