மறந்தோம் பாரதியே

தாமிரபரணியை கோலாவிலே அவர்
அடைத்ததை ருசித்திட சூப்பர் என்றோம்.
கூவத்தை சுத்தம் செய்யும் வாக்குகளே
சாக்கடை நீங்கள் தான் சொல்லிப்
புளித்தோம்.
வறட்டுப் புன்சிரிப்பில் வெடித்த வழி
லாரிகளோட்டி மணல் நாம் அள்ளி வந்தோம்.
சுந்தரத் தெலுங்கனின் பாகுபலி
கோடியில் கைத்தட்டி சிப்ஸ்
கொறித்தோம்.
கொஞ்சும் மலை ஆளிகளின் அழகன் கொண்டு
மணியரை நாம் அவர்க்கு பரிசளித்தோம்.
சோப்ராவின் நடனங்கள் நொடியில் பகிரவே வாட்சப்புக்கு நாமிங்கு
உயிர் கொடுத்தோம்.
இன்னும் சொல்லப்போனால் பாரதியே
உம் பாடலை நாம் என்றோ மறந்தோம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-Aug-15, 9:24 pm)
பார்வை : 110

மேலே