அந்தரங்கம் கூறிடாதே

உள்ளத்து உணர்சிகளை
உன்மீது
கொட்டிவிட்டேன்..
ஊருக்கும் சொல்லாதே..
உறவுக்கும் சொல்லாதே..
அந்தரங்கம் பிறர் அறிந்தால்
அவஸ்தை அதிகமாம்..
உன்னுள்ளே வைத்துக்கொள்
ஊமையாய் இருந்துகொண்டு..
உயிர் உள்ளவரை
உன்னாலே பெற்றுக்கொள்வேன்
உணர்ச்சியையும் உரிமையையும்..
அப்போதும் கூறிடாதே
என் எண்ணத்தின் வண்ணம் பேசும்
தினக்குறிப்பு புத்தகமே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (9-Aug-15, 9:44 am)
பார்வை : 657

மேலே