பெண்மை
பெண்ணாய் பிறந்து தப்பித்து செல்ல
நான் மட்டும் விதிவிலக்கா
சிக்கி கொண்டேன் அந்த
நாிகள் சூழ்ந்த பேருந்து கூட்டத்துகுள்
அலைகள் மோதும் பாறையில்
முலைத்த ஒரு செடியாய் போராடி நின்றேன
சென்ற பேருந்து கூட நின்று நின்று சென்றது ஆனால்
இந்த நாிகளின் தீன்டல்கள் மட்டும் நிற்கவே இல்லை்
பட்டும் படாமலும் தொடடும் தெ்ாடாமலும்
இருந்த அவா்களின் வேகத்தை கூட்ட
வசதியாய் வந்தது ஒரு வேக தடையும்
சாதிகள் இல்லையு பாப்பா என்று பாடிய
பாரதி கனவு உண்மையானது இங்கு மட்டும்்