வாழையின் வாழ்க்கை

வாழையின் வாழ்கை

எங்கோ ஓரமாய் கிடந்த
வேரொன்றை வேரூன்ற
முளைத்த மரமாகி
முழுமையாய் குடும்பமாய் .............

பெருத்ததும் சிறுத்ததுமாய்
வாழை கூட்டத்தில் மரங்கள் -
வாழ்க்கை தத்துவங்கள் நிறைய
நம் வாழ்க்கைக்கும் பாடமாய் ..............

இலைகளும் வாழை குலைகளும்
பூவும் காயும் கனியும்
சாரும் சருகும்
என எல்லாம் மனிதனுக்கு பயனாகவே .............

வெட்ட வெட்ட துளிர்க்கும்
விடா முயற்ச்சி எண்ணத்தோடு
வாழ்க்கை போராட்டத்தில்
வாழும் வரையில் தியாகத்தோடே...............

வளர்தவனுக்கு வஞ்சமில்லாமல்
வாரித்தரும் கற்பக விருட்சமாய்
காலத்திற்கும் கடமையை செய்தவாரே..........

மகிழ்சி சிரிப்பிலும்
மரண அழுகையிலும்
இரண்டு தூண்களாக
என்றைக்கும் வாழ்வில் ..............

விதை ஒன்று விதைக்க
விளைச்சல் வேறில்லை -
மனிதனும் மனிதனாய்
வாழ்ந்தால் மானுடும் செழித்திடுமே .

முளைத்த வாழையின் முழு குணமும்
விதைத்த விதையின் பாரம்பரியத்தை மீறியதில்லை
மனிதன் மட்டும் மனிதனின்
பாரம்பரியத்தை மறுப்பதேனோ .

அடிப்படை குணங்களை
மறந்துவிட்டதாலோ என்னவோ
மானுட வாழ்க்கையில் மட்டும்
நிம்மதி தொலைந்துவிட்டதாய்...........

தவறுகளை தேடி அழிக்கும் அன்றுதான்
மனிதனின் நிம்மதியை தேடும்
பயணம் முடிவடையும் -
நிம்மதி மனிதனை தேடும் ......

கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (10-Aug-15, 11:08 am)
பார்வை : 97

மேலே