யார் யார் யாரவரோ

            யார் யார் யாரவரோ

அவனுக்கானவன் அவள்தான் எந்த
அழகி லுமில்லையென்றாலும்
அன்றே அப்பொதே பதித்திருந்தார்கள்
ஊர்கூட்டாமல் உறவைக்கூட்டி
உறவை மறந்த இந்த புறாக்கள் 
முடித்துக் கொண்டார்களே இனி
சொர்க்கத்தில்தானென்று....

கொட்டும் அருவியுனூடே 
இருமயில்கள் தன்னை மறந்து
ஆடையற்றுறங்கும் அழகை மறைக்க 

வான் தோகைவிரித்த
நீல பஞ்சணைதான்
அவர்களுக்கு இப்போது
மறைவில்லை அவைகளுக்கும்
உன்னைப்போல் எனைப்போல்
உலகையே தனதென...

சூட்டிய கரங்களுக்கு ஏதும் வைக்காமல் மறந்து சென்றிருக்கலாம்
தோகைகளின் இடுக்கிலும் மேட்டிலும்
கவர்ச்சி இருக்கின்றதா என்று
பசியாற்றி.யிருக்கலாம்
பழியுரைத்தும் பாவம் சுமந்தும்
நீ கடந்து சென்றிருக்கலாம்.....

தெருவிளக்கின் வெளிச்சத்தில் 
மாடங்களுக்கும் 
தொட்டிகளுக்கும் 
பழகிக்கழித்திருக்கும் 
தெருநாய் கூட்டங்கள்
வசை பாடுகின்றன மனதிற்குள்ளே

யாராலோ வீசப்படும்
எச்சிலைக்கு சண்டையிட்டு
காத்துக்கிடப்பதைப் போல
குப்பை யோடு குப்பையாக
அவர்களின் மேல் தடாலடியாக
வீசிவிட்டுப் போயிருக்கலாம்...

வெட்ட வெளிப்புற உலகமே அவர்களுக்கு எப்போதும்
வியர்வை சிந்தி சிந்தி கடும்
நாற்றத்திற்கு முன்னால் 

காகித கஞ்சியின் நாற்றத்தோடு சுவாசிக்க மறுத்தும்
கண்களை இருக்கியும்
மூடிகொண்டிருக்கலாம்......

எல்லா தவறுகளுக்கும் எந்த
கணக்கில் கொண்டுபோய் 
இறைத்து புண்ணியம் என்று
ஏதோ ஒரு நல்லநாள் பார்த்து 

அர்த்தமின்றி இறைத்துவிட்டும் 
தலை மயிரை அறுத்துவிட்டும் 
முடி காணிக்கை யோடு அலகிட்டும்
ஊர் மெச்ச தீசட்டியேந்தி 

பொய்யான வேண்டுதல்களில் 
நிறைவான பரிகாரத்திற்காக 
அடைந்த மகிழ்ச்சியில்
அமைதி பெற்றதாய் 
கர்வமிருக்கலாம்.......

எல்லாம் உன்னைவிட்டு போனதும்
ஒருமுறையாவது கேட்டி  ருப்பாயா?
திரும்பித்தான் பார்த்தி ருப்பாயா?

உன்னால் 
ஒருநாளும் திறக்கப்படாத
உன் வீட்டு கதவின் சன்னலில்
எத்தனையோ முக்கல் முனகல்களின்
அலறல் ஓசைகள் உன் செவிகளில்

ஆதரவின்றி தெருமுனையில்
ஆலய வாசல்களில் 
சாலையோரங்களில்
கடை வீதிகளில்
உழன்றுக் கொண்டிருக்கும் 
அசுத்தக் காற்றுக்கும் உன் மேல்
வெறுப்பு உண்டாக்கும்

பரிகாரம் செய்ய கோயில் கோயிலாக
பூசனையாகங்களெல்லாம்
உனக்காக பரிந்து பேசப்போவதில்லை
யார் யார் யாரிவரோ
யாரோடு யார்
எப்படி போனால்தான் என்ன 

ஊர்சனங்கள் கூடி 
ஆறடிக்குள் இல்லை
விராட்டிக்குள் இல்லை
மின் மயானத்திற்குள்
இட்டுமூடி இறுதிவரையும் 
இத்தனையையும் கண்டுவிட்டு 

எனக்கென்னவென்று நீ வாழ்ந்து விட்டு
வாழாமல் சிலவற்றை தேர்ந்து
கற்றுக் கொண்டு செல்...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (10-Aug-15, 10:54 am)
பார்வை : 73

புதிய படைப்புகள்

மேலே