பூரண சரணாகதி- சாதாரணமாகத்தான் இருக்கிறது-II

ஒரு எம்பு ..
வேலிக்கு மேல் நின்ற ஓணானை
பிடிப்பதில் தோல்வி ..
உற்றுப் பார்த்து விட்டு..
மீண்டும் வந்து
வால் சுருட்டி
படுத்துக் கொண்ட நாய் ....
அதை
முற்றிலும் மறந்து
சாதாரணமாகத்தான் இருக்கிறது!
..
குரங்குக்குட்டி தாயின் வயிற்றை
உடும்புப் பிடியாய்
பிடித்துக் கொள்கிறது போல்
இறை நம்பிக்கை உண்டென்றால் அது
தன்முனைப்பு கூடியது..
தளர்ந்து விடும் ஒரு சமயம்..
பூனைக்குட்டியோ .. தன்னையே
தாயிடம் ஒப்படைத்து விட்டு
பூரண சரணாகதி யோடு இருப்பது
போல் உள்ள இறை நம்பிக்கைக்கு ஈடு எதுவுமில்லை
என்ற ராமகிருஷ்ணரின் பாதையை
எடுத்துக் கொண்டதோ இந்த நாயும் கூட..
பெற்ற தோல்வியும் வரப்போகும் நல்லதும்
எல்லாமே அவன் செயல் என்று எண்ணியதால்..
அது..
சாதாரணமாகத்தான் இருக்கிறது..
கற்றுக் கொள்கிறேன் ..
அதனிடமிருந்து!

எழுதியவர் : கருணா (10-Aug-15, 2:59 pm)
பார்வை : 118

மேலே