காதல் சாரல்கள் - 3

நீ பயணித்த பேருந்தில்,
நானும் ஏறினேன்.
செல்லுமிடம் கேட்டார் நடத்துனர் -
சொர்க்கம் என்றேன்.
----------------------------------------------------------
என்னைப் பார்த்தவுடன்,
உன் ஸ்கூட்டியும்,
ஒருபுறம் தலை சாய்த்து -
நிற்கிறது உன்னை போல.
-------------------------------------------------------------
என் இரு சக்கர வாகனத்தில்,
நீ உடன்வரும் நாளெல்லாம்,
அதற்க்கு ஆயுத பூஜைதான்.
------------------------------------------------------------
பேருந்தில் பெருங்கூட்டம்,
சுற்றிலும் பேரிரைச்சல்,
இருந்தும் -
நாம் அதிகம் பேசிவிடுகிறோம்;
மௌனமாகவே.
------------------------------------------------------------
வேக ரயிலின் பெட்டியில்,
இரவு நேரம்
நாம் ஒன்றாக பயணிக்கையில்,
ரயிலை விட
அதிகமாக தடதடக்கிறது ,
என் இருதயம்.
-----------------------------------------------------------
நீ பில்லியனில் ஏறி
உட்கார்ந்து கொள்கையில்
மில்லியன்cc ஆகிவிடுகிறது
என் பைக்கின் வேகம்.
---------------------------------------------------------------
அன்று நீ சாலை கடக்கையில்
நின்ற என் வாகனம்
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது
உன் சிக்னலுக்காக.
----------------------------------------------------------------

எழுதியவர் : செந்ஜென் (11-Aug-15, 1:31 am)
பார்வை : 112

மேலே