ஏக்கம் என்னுளே

விண்மீன் பூக்களை கைபறித்து,
மின்னலின் கயிற்றில் அவைக் கோர்த்து,
கார்குழல் கூந்தலை அலங்கரித்து,
காண்போர் கண்களை அபகரித்து,
நீ நடந்தாலே என் நெஞ்சம்,
ஏக்கம் கொள்ளாதோ?

புயலோரத்தில், ஒரு பூ மரம்,
அசையாமலே நிற்கின்றதே!
புயல் நானடி, மரம் நீயடி,
உன்னால் நானே வலுவிழந்தேன்!

எழுதியவர் : பெருமாள் (11-Aug-15, 12:57 am)
சேர்த்தது : பெருமாள் ராஜா
Tanglish : aekkam ennule
பார்வை : 97

மேலே