கமலியோட பாலும் நெய்யும்

சரோ.. இன்னும் என்னபண்ணற மணி ஆகுது பாரு சீக்கரம் வா.. நீ ஆடி அசஞ்சு வர்றதுக்குள்ள முகூர்த்தமே முடிஞ்சுபோய்டும் சர சரணு கிளம்பமாட்டயா ..
இதோ வந்துட்டேன்கா என குரல் கொடுத்தாள் சரோ என்கிற சரோஜா.. என் பக்கத்துக்கு வீட்டுக்காரி.. அடுத்த வீடுதான்.. புரளி பேசும்போதுமட்டும் அக்னி ஏவுகணை போல ஆதிவேகமாக வருபவள்.. வெளியிடத்துக்கு புறப்படும்போதுமட்டும் ஆமையாகி விடுவாள் அப்படி என்னதான் அந்த கோகுல்சன்டால் பவுடர்ல இருக்கோ எனக்கு தெரியாதுங்க.. சத்தியமாங்க அட நம்புங்க இந்த கமலம் பொய் சொன்னதே இல்ல .. (குறிப்பு: என்னதான் சரோ பவுடர் போட்டாலும் அழகா இருக்கறது என்னமோ நான்தான்...ம்ம்ம்). இச்ச்ச்ஸ் அவ வந்துடா நம்ம அப்பறமா பேசலாம்..
ஹீ ஹீ என்ன சரோ ஆள் பாக்க பலபலன்னு ஜோலிக்கற.. என்னடீ கல்யாண பொண்ணு நீயா இல்ல நம்ம குமுதா மக மதிஸ்ரீயானு எல்லாரும் கன்னுவைக்க போறாங்கடீ..
ஹும்ம் போங்கக்கா உங்களுக்கு எப்பவும் என்ன புகழ்றதே வேலையாபோச்சு.. ஆமா அக்கா நா அவ்வளவு வயசுகம்மியாவா தெரியறேன் அடுத்தது நானும் மருமகன் எடுக்கபோறேன் இப்போபோய் கல்யானபொன்னு அது இதுனுட்டு போங்கக்கா.
ஏய் சரோ இப்போதானடி உன் பொண்ணு +2 முடிக்கபோறா அதுக்குள்ள என்ன கல்யாணத்துக்கு அவசரம் கொஞ்சநாள் புள்ளைய மேல படிக்கவையு.. நானே அவர் கிட்ட சொல்லி எங்க கம்பெனிலையே போஸ்டிங் போடா சொல்லிடறேன்..
ஆஆஆ...அது வந்துக்கா நன் அதுக்காக சொல்..ல..ல...
என்ன சரோ... இழுவ வலுவா இருக்கு.. அதுக்குதானே அப்போவே சொன்னேன் பொண்ண வீடுக்குள்லையே வட்சுருக்காதே நாலு பக்கம் அனுப்புன்னு சொன்னேன்..
ஆக்கா.. நீங்க வேற வயதுல புளிய கரைகாதிக.. அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கலக்கா.. அவ இன்னமும் வெளியுலகம் தெரியாம பால் மனம் மாறாம வெகுளியா இருக்கா அதான் என் கவலையே.. இப்போ பொறக்கறதுகெல்லாம் என்னமா விவரமா இருக்கு.. என் புள்ளைக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியறது இல்ல அவ ஒரு வெள்ளந்திக்கா.. அதான் சீக்கரமே ஒருத்தன் கைல பிடிச்சு குடுத்துடலாம்னு..
அடீ போடீ போடீ இவளே பாலாம் வெள்ளந்தியாம் இந்தகாலத்துல போய் இப்படி பைத்தியகாரத்தனமா ஒளறாதே நம்ம காலம் இல்லடி இது இப்போ நடக்கறது கலாம் காலம் புரியுதா.. சும்மா பொண்ணுக எல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கனுமடி..
வெறும் பாலா இருந்தா அந்த நாளுலேயே கெட்டுடும் சரோ. காலத்துக்கு ஏத்தமாதிரி அவள அவதான் பக்குவபடுத்தனும்.. அப்பறம் அம்மானு சொல்ல நீ எதுக்கு.. இப்போ தெரண்டு நிக்குற வெண்ணெய் மாதிரி அவ பருவம் இருக்கு.. நீதான் காலத்துல உருக்கி என்னைக்கும் கெடாத 'நெய்யா' உருமாத்தி அவ வாழ்க்கைய மேருகேத்தனும்.. அப்போதான் அவ வாழ்க்கை மணம் வீசுமடீ..
என்ன நான் சொல்லறது புரியுதா.. ஏய்...??? ஏய்..??? சரோ ..?? சொல்லிட்டுஇருக்கேன் வேகமா எங்கடி நடயகட்டுற.. ???
ஒருநிமிஷம்க்கா .. பால காட்சாம வெளியவே விட்டுட்டு வந்துட்டேன்.. மனசு கேட்கல.. இனியாவது காட்ச்சி பக்குவபடுத்தி நெய்யா உருக்கிடறேன்.. நீங்க போய்டுவாங்க.. நான் மதிஸ்ரீய மனசார வாழ்த்தினென்னு சொல்லிடுங்க என்றாள் கண்கள் குளமாக.. ம்ம்ம்ம் அதுசரி அவ போய்ட்டா இப்ப நம்ம பேசலாம்.. ( சரோ மக 'நெய்' ஆயிருவா சரி .. உங்க பொன்னு பய்யன் எல்லாம் எப்படி.. இந்த கமலாவோட 'பாலா' ? இல்ல 'நெய்யா' !!!??.) ஹும்ம் நமக்கு எதுக்கு ராம ஊர் பொல்லாப்பு கொஞ்சம் மணி என்னாச்சுனு சொல்லறிங்களா, எனக்கு நம்ம குமுதா மக மதிஸ்ரீ கல்யாணத்துக்கு போகணும்.. வரட்டுமா.. !!!!.

எழுதியவர் : Kiruthika Ranganathan (12-Aug-15, 6:11 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 228

மேலே