ஐந்து நிமிட கதை - பிரசாதம்
பிரசாதம்
---------------
ராதிகா ரொம்ப டென்ஷனாள்.காரணம் எதிர்வீட்டு தெலுங்குமாமி கொடுத்த பலவித ஷேத்ர சாமி (தெற்கு+வடக்கு) பிரசாதங்கள் கலவையாக.பிரசாதமாக தரப்படவில்லை.மீந்துப் போனது தரப்பட்டிருக்கிறது.பிரிஜ்ஜில் வைக்கப்பட்டது.உள் சாப்பிட உகந்தது அல்ல.
ஒரே ஒரு துளி குங்குமம் மட்டும் குத்துமதிப்பாக ஒரு சாமியை நினைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டாள்.எப்படி டிஸ்போஸ் செய்வது?அஃறினண அல்லது உயர்தினணகளுக்கு தள்ளிவிட மனசாட்சி அனுமதிக்கவில்லை.திருப்பிக்கொடுக்க முடியாது.
ஒரு சுலப வழி இருக்கிறது.ராதிகா என்ன செய்யப்போகிறாள்???தெலுங்கு மாமி கும்பிட்ட எல்லா ஷேத்ரசாமிகளும் ரொம்ப ஆர்வமாக ராதிகாவைக் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
ரெண்டு வேளையாக பய பக்தியுடன் வாயில் வைத்து முழுங்கினாள்.கடவுள்கள் அதிர்ந்தார்கள்.அடி.. மக்கே! இதற்கும் காலாவதி தேதி உண்டு அதன்படி இது குப்பைத்தொட்டிக்குதான் போகவேண்டும்.தெலுங்கு மாமி சாமிகள் ராதிகாவைத் திட்டினார்கள்.
குங்குமம் இட்டுக்கொள்ளும்போது கூட க்ளூ கொடுத்தேனே என்று
திருப்பாச்சூர் தங்காதளி அம்மன் தன்னை ரொம்ப நொந்துகொண்டாள்.
Posted by Ravishankar Krishnamurthy