ஐந்து நிமிட கதை - வாய்க்கரிசி

வாய்க்கரிசி
--------------------

”இதானே”

மார்ச்சுவரி அருகே ஸ்டெரச்சரில் பெண் பிணம் காலை விரித்தபடி சாம்பல் பூத்து கிடந்தது.நான்கு மாத கர்ப்பத்தில் வயிறு பூசி இருந்தது.பக்கத்தில் போலீஸ்காரர்.

“கைவுட்டுட்டு ஓடினனே.. அந்த பொறம்போக்கு என்ன ஜாதி?”

எதிரில் இருந்தவர் முகம் இறுகி எதுவும் பேசவில்லை.

”வாய்க்கரிசி தீர்த்தம்ன்னு சம்பிரதாயத்த முடிச்சிடுங்க “

“அதெல்லாம் வேண்டாமுங்க.களுத தொலைஞ்சா போதும்”கத்தையாக ரூபாய் நோட்டுக்களை போலீஸ் கையில் அழுத்தினார்.

“அட ரிக்கார்டலதான் அனாத பொணம்.உனுக்கு நீ பெத்த பொண்ணூ.” சொல்லி முடிப்பதற்குள் அவர் போய்விட்டிருந்தார்.

வார்டுபாயிடம் கால்கிலோ அரிசியும் தண்ணீர் பாக்கெட்டும் வரவழைத்து முகத்தில் தண்ணீர் பீச்சியடித்து கொத்தாக அரிசியை வாயில் போட்டார்.

நன்றி ;Posted by Ravishankar Krishnamurthy

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Aug-15, 1:55 pm)
பார்வை : 220

மேலே