ஒரு சில நேரங்களில்
ஒரு சில நேரங்களில்
இருண்ட வானாய் எந்தன் வாழ்வும்
இடிந்தே போகின்றேன் நான் ....
இருக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல் ...
இடிந்தே போகின்றேன் நான் ....
மாயையான இவ்வுலகில் .....
கோழைகள் வாழ்வது கடினமே .... ஆம்
என் போன்ற கோழைகள்
வாழ்வது கடினமே - என்பதனால்
இடிந்தே போகின்றேன் நான் ....
இருக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல் ...
இடிந்தே போகின்றேன் நான் ....
சொல்லி கொள்ள உறவுகள் உண்டு ... ஆனால்
சொல்லும்படியாய்........
எனக்கென சொல்லும்படியாய் உறவுகள் இல்லை ....
ஆதலால் அனாதையாய் உணர்கின்றேன் ....
என் மனதில் உள்ள காதல் தனை
மண்ணில் உள்ளோர் அறிவதில்லை......
ஆதலால் ஒரு சில நேரங்களில்
இருண்ட வானாய் எந்தன் வாழ்வும்
இடிந்தே போகின்றேன் நான் ....
இருக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல் ...
இடிந்தே போகின்றேன் நான் ....

