இறக்காமல் இருக்கிறேன்
இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!
காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை